கடந்த வருடம் உயர்தரப் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேற்றைப் பெற்ற 30 மாணவர்கள் கௌரவிப்பு!

கடந்த வருடம் வெளியாகிய உயர்தரப் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேற்றைப் பெற்ற 30 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கி உயர்கல்விக்கான நன்கொடையும் வழங்கப்பட்டன.

யாழ்.பாதுகாப்புப் படைத்தலைமையத்தின் ஏற்பாட்டில் இன்று  (31) பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், கல்விப் பொதுதராதரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு, பாடசாலை உபகரணங்கள் மற்றும், பல்கலைக்கழகத்திற்குச் செல்லவுள்ள மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்குவிப்புத் தொகையான 5 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், விழிப்புலனற்ற வாழ்வகத்தைச் சேர்ந்த இரு மாணவர்களுக்கு உயர் கல்விக்காக எதிர்வரும் 3 வருடங்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா தொகையும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி டர்சன ஹெட்டியாராட்சியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]