கடந்த கால கசப்பான அனுபவங்கை மறந்து மேல் எழ வேண்டும்

மீண்டும் மீண்டும் பத்து வருடத்துக்கு முந்திய யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது. கடந்த காலங்களில் நடந்தவைகளால் பாதாளத்துக்குப் போய்விட்டோம். இனி எழும்ப வேண்டிய காலம். ஒரு பந்தை அடித்தால் அது மேலே எழும்ப வேண்டும் அது போலத்தான் சமூகமும். அவ்வாறில்லாவிட்டால் அச்சமூகம் அழிந்து போகக்கூடிய சமூகமாக இருக்கும் என மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கனகசூரியம் அகிலா தெரிவித்தார்.

மண்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலளப்பிரிவிலுள்ள மகிழவெட்டுவான் கந்தப்போடி வித்தியாலயத்தில் நடைபெற்ற, புலம்பெயர் ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் ஆதவில் கிராம அபிவிருத்தி என்ற தொனிப்பொருளிலான மாணவர்கள், தாய்மாருக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்கள் அழிந்து போகக்கூடிய நிலைமை காணப்படுகிறது. சில இடங்களில் முதலாம் வகுப்பில் ஒருபிள்ளை, 2ஆம் வகுப்பில் பிள்ளைகளில் இல்லை 3ஆம் வகுப்பில் 3 பிள்ளை என காணப்படுகிறது. அப்படியாள கிராமங்கள் இன்னுமு; 50 வருடத்தில் அப்படியான கிராமம் இருந்ததா என்று தெரியாமல் அழிந்து போகக்கூடிய நிலை காணப்படுகிறது. ஆகவே இதனை நாம் இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கல்விப் பாதுத் தராதர சாதாரணதரப்பரீட்சை முடிவுகளின் படி 98 வலயங்களில் கடைசி இடத்தில் இருக்கிறோம் இவ்வாறான நிலையில் முன்னர் தமிழர்களின் கல்வி இருந்ததில்லை. மீண்டும் மீண்டும் பத்து வருடத்துக்கு முந்திய யுத்தத்தைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது. நாம் கடந்த காலங்களில் நடந்தவைகளால் பாதாளத்துக்குப் போய்விட்டோம்.

கடந்த கால கசப்பான

பாதாளத்திற்குப் போன நாங்கள் இனி எழும்ப வேண்டிய காலம். ஒரு பந்தை அடித்தால் அது மேலே எழும்ப வேண்டும் அது போலத்தான் சமூகமும். அவ்வாறில்லாவிட்டால் அச்சமூகம் அழிந்து போகக்கூடிய சமூகமாக இருக்கும். எமது வலயத்தைப்பார்த்தோமானால் 30 வீதமானவர்கள் மாத்திரம்தான் உயர்தரக்கல்வி கற்கக்கூடிய சித்திகளைப் பெற்றிருக்கிறார்கள். 70 வீதமானவர்கள் தகுதியிழந்திருக்கிறார்கள். 88 மாணவர்கள் எந்தப்பாடத்திலுமே சித்தியடையவில்லை. இலங்கையில் அதில் நாங்கள் 2ஆவது இடத்தில் இருக்கிறோம். இதனைவிடவும் 70 வீதமானவர்கள் உயர்தரம் கற்கத் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். எஎல்லோருமம் 9 ஏ எடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. உயர்தரத்திற்கு 3 சி, 3 எஸ். எடுக்குமு;படிதான் கேட்கிறோம்.

தாய்hர்கள் பிள்ளைகளை வளர்க்கும் போது பாடசாலைக்குத்தினமும் அனுப்பக்கூடியவராக மாறவேண்டும். ஒரு சமூகம் உதவியைப் பெறும்போது நாம் கடனாளிகள். அந்தக் கடனைத்திருப்பிக் கொடுக்கலாம் என்றால் நல்ல மாணசவர் சமூதாயத்தை உருவாக்கி நல்ல பிரஜைகளை உருவாக்குவதன் 5மூலம் தான் அதனை அடைக்கலாம். அரசாங்கத்திற்கு நாங்கள் கடனாளிகள் ஒவ்வொரு வருடமும் அரசாங்கம் பணம் செலவு செய்கிறது. ஆனால் சைபர் வீதத்தில் இருக்கிறோம். இது தொடருமாக இருந்தால் எங்களது கடன் சுமை கூடிக்கொண்டே போகும். கடன் என்று நான் கூறுவது தார்மீகமான கடன். கடமை இருக்கிறது. ஒருவர் உதவி செய்தால் அதனை கொடுக்க வேண்டியிருக்கிறது. மாணவன் உதவியைப் பெறும்போது அவன் கல்வியை முழுமையாக பெற்று சமூகத்தற்கு வழங்க வேண்டும்.

ஆகவே தொடர்ச்சியாக நாங்கள் இலங்கையில் கடைசி என்று சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. அதில் மாற்றத்தினைக் கொண்டு வர வேண்டும். அதற்கு முதலில் எங்களுக்கு நாங்களே சொந்தச் செலவில் வைத்திருக்கும் சூனியமான தொலைக்காட்சியை விட்டொழிக்க வேண்டும். அதற்குச் செலவழிக்கும் பணத்தில்ஒரு தொகையையாவது பாடசாலைக்குச் செலவழிக்கிறோமா என்பதனைப் பார்க்க வேண்டும்.
தாய்மார்கள் பிள்ளைகள் சிறியவர்கள் தானே என்று அவர்களையும் வைத்துக்கொண்டு பார்க்கிறோம். நாடகங்களில் சித்தரிக்கப்படும் மோசமான உறவுகள், மோசமாகச்சித்தரிக்கப்படும் பெண்கள், பொருத்தமில்லாத செயற்பாடுகளை பார்த்து வளரும் பிள்ளைகள் சமூகத்திற்குப் பொருத்தமில்லாதவர்களாக வளர்கிறார்கள்.

இலங்கையில் இன்னும் இரண்டு விடயத்தில் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம். ஒன்று வறுமை மற்றது மது பாவனை. இதெல்லாம் வெட்கப்பட வேண்டிய விடயம். என்னைப்பொறுத்தவரையில் தமிழ் சமூகம் சோம்பேறியாகப் போயிருக்கிறது. எப்பொழுதும் கையேந்துபவர்களாக இருக்கிறோம் நாங்கள் பெறும் உதவியை பன்மடங்கு திருப்பிக் கொடுப்பவர்களாக மாறவேண்டும். அதற்காக தாய்மார்களாகிய உங்களது கைகளில் நிறையவும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பிள்ளைகளின் கல்வியை கருத்தில் கொண்டு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். பிள்ளைகளைக் கவனமாக வளருங்கள் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]