கடந்தாண்டு 184,442 பேருக்கு டெங்கு

கடந்த 2017ஆம் ஆண்டு, 184,442 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர் என, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 41.53 சதவீதமானவர்கள், மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனரென்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாத்திலேயே, அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு உள்ளதோடு, அவர்களின் எண்ணிக்கை 41,121ஆகக் காணப்படுகின்றது.
மேலும், 2017ஆம் ஆண்டு ஜனவரியில் 10,927 டெங்கு நோயாளர்களும் பெப்ரவரியில் 8,727 பேரும், மார்ச்சில் 13,540 பேரும், ஏப்ரல் மாதத்தில் 12,510 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, மே மாதத்தில் 15,936 பேருக்கும் ஜூன் மாதத்தில் 25,319 பேருக்கும், ஓகஸ்ட் மாதத்தில் 22,270 பேருக்கும், செப்டெம்பர் மாதத்தில் 9,514 பேருக்கும், ஒக்டோபர் மாதத்தில் 6,594 பேருக்கும், நவம்பர் மாதத்தில் 8,814 பேருக்கும், டிசம்பர் மாதத்தில் 9,173 பேருக்கும் டெங்கு தொற்றியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

இதற்கமைய, டெங்கு நுளம்புகள் பெருகும் வகையிலான சூழல் காணப்படுமாயின், அவை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதன் அவசியம் குறித்து, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு கூட்டிக்காட்டியுள்ளது.

மேலும், காய்ச்சல் மூன்று நாட்களுக்கு நீடித்தால், உடனடியாக வைத்தியரை நாடுவது அவசியமென, அப்பிரிவு மேலும் கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]