கஞ்சிபான இம்ரான் 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை

டுபாய் அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்ட நிலையல், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட கஞ்சிபான இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரானை, 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால், அவர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக, பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

விசாரணைகளின் பின்னர், அன்டர்ச்ன பெர்ணான்டோ விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நால்வரில், ஜங்கா எனப்படும் அனுஷ்க கௌஷால் என்ற சந்தேகநபர், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என அடையாளங்காணப்பட்டுள்ளதால், அவரை, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகவும் அவரை, எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான அமில சம்பத்தை, ரொட்டும்ப பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், அவரும் ஏப்ரல் 2ஆம் திகதி விரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

டுபாயில் கைது செய்யப்பட்டவர்களில், இதுவரை 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]