கஞ்சா விற்பனையை நிறுத்துமாறு கூறிய பெண் மீது தாக்குதல்

மனைவியை தாக்கிய குற்றச்சாட்டின் அவரது கணவரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனால் தாக்குதலுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், வீட்டிலேயே குறித்த பெண்ணின் கணவன் கஞ்சா விற்பது தெரியவந்தது.

அத்துடன், கஞ்சா வாங்க மற்றும் விற்க வரும் நபர்களால் தான் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாக அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கஞ்சா விற்பதை நிறுத்துமாறு கூறிய போது, கோபமடைந்த கணவன் தன்னைத் தாக்கியுள்ளதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து, குறித்த வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 21 கஞ்சா பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதனையடுத்து, பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]