கஜா புயல் – யாழ் மக்களுக்கு விஷேட அறிவித்தல்

இலங்கையின் வடக்கு வடமத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம், திருகோணமலை போன்ற மாவட்டங்களில் நாளை மற்றும் நாளைய மறுதினங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய வங்களா விரிகுடாவில் உருவாகியுள்ள ‘கஜா’ புயல் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தீபகற்பத்தின் ஊடாக மணிக்கு 100 கிலோமீற்றர் வரை கடும் காற்று ஏற்படக்கூடும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வட மாகாணத்தின் சில பிரதேசங்களில் 100 மி.மீக்கும் அதிகமான மழை வீச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் மேலும் கூறியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – in[email protected]