கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தல எத்தனை கோடி கொடுத்தார் தெரியுமா? வெளியான வீடியோ!

இந்தியாவில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரும் உதவி செய்துள்ளனர். இதில் நடிகர் அஜித் ரூ.5 கோடி கொடுத்துள்ளதாக விநியோகிஸ்தர் 7ஜி சிவா தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, ரசிகர்கள் மூலம் அல்லது ரசிகர்கள் செய்யும் சில நல்ல விஷயங்களையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இப்படி தெரியப்படுத்துவதன் மூலம் கண்டிப்பாக தேவை இல்லாத அவதூறு பேச்சுகளை தவிர்க்கலாம்.

ஏனென்றால் தேவை இல்லாமல் அஜித் பற்றி வரும் வதந்திகளை தடுக்கலாம். அதேநேரம் அடுத்தவர்களுக்கும் முன் உதாரணமாக இருக்கலாம். அஜித் ரசிகர்கள் எல்லாம் ஏதோ கடைசியாக வெளிவந்த நான்கு, ஐந்து படங்களின் வெற்றிகளால் வந்தவர்கள் அல்ல. ரெட், ஜனா என பல தோல்வி படங்களை அஜித் கொடுக்கும்
போதும் கூடவே இருந்தவர்கள். ஒரு படமாவது வெற்றி கிடைக்குமா என்று ஏங்கி ஏங்கி கடைசியில் இப்பொழுது வெற்றியை மட்டுமே பெற்று கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]