கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா இன்றுடன் நிறைவுபெற்றது

கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.

இன்றையதினம் காலையில் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமதுங்க தலைமைத்துவத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருவிழா புனிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தது.

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

கச்சதீவு அந்தோணியாருக்கு முதன்முறையாக சிங்கள மொழியில் ஆராதனைகள் இடம்பெற்றது. மற்றும் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேக்கு மரத்திலான புதிய கொடி மரம் கொண்டு கொடியேற்றிவைக்கப்பட்டது.

இந்த வருடாந்த திருவிழாவில் இந்தியாவிலிருந்து 62 படகுகளில் 1,968 பேர் வந்திருந்தனர், இலங்கையிலிருந்து 6,182 பேரும் கலந்து சிறப்பித்தனர்.

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

இவர்களுக்கான குடிநீர் வசதி, தங்குமிட வசதி உள்ளிட்ட ஏனைய அனைத்து வசதிகளையும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் உதவியுடன், யாழ் உள்ளுராட்சி மன்றங்களின் அனுசரனையுடன் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்ற இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்கான உணவு இலங்கை கடற்படையால் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை, ஆனால் இந்த வருடம் இந்திய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாகச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா