கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஆரம்பம்

புனித அந்தோனியார்

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது பக்கதர்களுக்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை (23) மற்றும் நாளை மறுதினம் (24 ) மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் கடற்படையினரும் இணைந்து பக்கதர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர். இம்முறை இந்தியாவிலிருந்து 2103 பக்தர்களும் இலங்கையிலிருந்து சுமார் 8ஆயிரம் பேரும் புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக இராணுவப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

பக்தர்களின் நலன் கருதி நிரந்தர மலசல கூட வசதிகள் மற்றும் மேலதிகமாக தற்காலிக மலசலகூட வசதிகள் என்பன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளை யாழ்ப்பாணத்தில் இருந்து குறிக்கட்டுவன் வரையான பேருந்து சேவை அதிகாலை 4 மணியிலிருந்து நண்பகல் ஒரு மணிவரை இடம்பெறும்.

அதே போன்று குறிகட்டுவானில் இருந்து கச்சதீவு வரை காலை 5 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். படகுச்சேவைக்கான ஒருவழி கட்டணமாக 300 ரூபாய் அறவிடப்படவுள்ளது. நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கு ஒரு வழிக் கட்டணமாக 225 ரூபாய் அறவிடப்படவுள்ளது.

அத்துடன் சேவையில் ஈடுபடும் படகுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே சேவைக்கு அனுமதிக்கப்படவுள்ளன.

இம்முறை பொலிஸ் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் 200 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]