ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 எம்.எல் படத்தின் ட்ரெய்லர் உள்ளே- 18 – 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்!!

தமிழ் சினிமாவில் களவாணி, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடிகையாக நடித்திருந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அவருக்கென ரசிகர் பட்டாளம் அதிகரித்து ஓவியா ஆர்மி உருவாக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கடந்த ஒரு வருடமாக தமிழில் அவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த சிலுக்குவார் பட்டி சிங்கம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே அவர் நடனமாடியிருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து ஓவியா நடித்திருக்கும் களவாணி 2, காஞ்சனா 3, 90 எம்.எல் ஆகிய படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 90 எம்.எல் படத்தை அனிதா உதீப் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்துள்ளார். படத்துக்கு தணிக்கைக்குழு ‘A சான்றிதழ் வழங்கியுள்ளது.

அடல்ட் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும் என்ற எச்சரிக்கையுடன் 1 நிமிடம் 50 விநாடிகள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லரில் இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி நிறைந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

இதுவரை ஆண் கதாபாத்திரங்கள் மதுகுடித்து விட்டு தமிழ் சினிமாவில் பேசிய வசனங்களை பெண் கதாபாத்திரங்கள் பேசுவது போல் ட்ரெய்லர் அமைந்துள்ளது. சமீபத்தில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு எழுந்த விமர்சனத்தைப் போல் 90 எம்.எல் படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், “இந்த மாதிரி படங்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு” என்று கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]