ஓவியா – சிம்பு திருமணம் உண்மையில்லையா!!!!

ஓவியா

தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஆரவ் மீது காதல் வயப்பட்டார் ஓவியா. அவரின் காதலை ஆரவ் ஏற்க மறுத்துவிட்டார். அதனால் மனமுடைந்த ஓவியா அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிம்புவிற்கும் நடிகை ஓவியாவிற்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவயது.

தற்போது அப்படத்தின் உண்மை நிலை தெரியவந்துள்ளது. அந்த படம் உண்மையானது இல்லை எனவும் அப்படம் இது நம்ம ஆளு படத்தின் வரும் புகைப்படத்தை மாற்றி அமைத்து வெளியாகிய புகைப்படம் என தெரியவந்துள்ளது.

கடந்த சிலதினங்களாக இணையத்தில் உலாவந்த இந்த படத்துக்கு தற்சமயம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஓவியா ரசிகர்களை ஆட்டிப் படைத்த புகைப்படத்தில் உண்மையாக இருப்பது இது நம்ம ஆளு படத்தில் நடித்த நயன்தாரா ஆவார்.

யாரோ வேண்டுமென்றே இந்த படத்தினை இணையத்தில் பரப்பியிருக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]