ஓவியாவின் புதிய ஹெயார் ஸ்டைல் என்ன சொல்கின்றது..?

இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ் தான் அனைவரும் பேசும் ஒரே ஒரு விடயம். அதிலும் ஓவியா தான் நிகழ்ச்சியின் பிளஸ் பொயின்ட் என்றே கூறலாம்.

ஆனால், அவரே தற்போது நிகழ்ச்சியில் இருந்து விலகியிருப்பது அவரது ரசிகர்ககள் மத்தியில் கவலையில் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆனாலும், அங்கு நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக பழகினார். ஒரு கட்டத்தில் அவரை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் முத்தமிட்டுக்கொண்டனர்.

ஆரவ்விடம் தனது காதலை ஓவியா வெளிப்படுத்தினார். ஆனால் அவருடைய காதலை ஆரவ் ஏற்கவில்லை. நட்பாக பழகியதாக சொல்லி விலகினார். காதல் தோல்வியால் ஓவியா மன அழுத்தத்துக்கு ஆளாகி கண்ணீர் விட்டு அழுதார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கும் முயன்றார்.

ஓவியாவின் புதிய ஹெயார்

மனோதத்துவ நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பொலிஸார் விசாரணை நடத்தவும் நேர்ந்தது. தற்போது டி.வி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். இந்த நிலையில் ஓவியாவை மணக்க நடிகர் சிம்பு விருப்பம் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை சிம்பு மறுத்தார்.

காதல் சர்ச்சையில் சிக்கிய ஓவியாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிகின்றன. டைரக்டர்கள் அவரை அணுகி கதை சொல்லி தங்கள் படங்களில் நடிக்க அழைப்பு விடுத்து வருகிறார்கள். விஷ்ணு விஷாலின் சிலுக்குவார் பட்டி சிங்கம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

விஜய் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் அவரிடம் பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு ஓவியா தலை முடியை வித்தியாசமாக வெட்டி புதிய தோற்றத்துக்கு மாறி இருக்கிறார்.

கமல் எவ்வளவோ சொல்லியும் ஓவியா போட்டியில் பங்கேற்க மறுத்தார். இதனால், பிக்பாஸ் டிஆர்பி பாதியாக குறைந்தது. இதனால், ஓவியாவிற்கு போட்டியாக டிஆர்பி ஏற்ற முன்னணி ஹீரோயின் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

அவர் ஆகஸ்ட் 15ஆம் திகதி வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், ஓவியாவே மீண்டும் கொண்டுவர ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]