ஓவியாவால் பார்வதி நாயருக்கு கிடைக்கும் வாய்ப்பு?

`களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு’ அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்நிலையில், ஓவியா தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக இளைஞர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதால், விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஓவியா இழக்க இருப்பதாக கூறப்படுகிறது.

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படம் `சீதக்காதி’. இந்த படத்திலும் விஜய் சேதுபதியே நடிக்கிறார். அவருடன் ரம்யா நம்பீசன், காயத்ரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.

அதேநேரத்தில் நடிக்க ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால் ஓவியா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதால், அவரது கதாபாத்திரத்தில் பார்வதி நாயரை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பாஃஷன் ஸ்டூடியோஸ் சார்பில் அருண் வைத்யநாதன் தயாரிக்க இருக்கிறார்.

இந்த ஒரு பட வாய்ப்பு போனால் என்ன, ரசிகர்களின் மனதில் ஓவியா நீங்கா இடம்பிடித்துவிட்டார் என்பதால் அது ஒரு பொருட்டாகவே இருக்காது என்பது அனைவரது எண்ணமாக இருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]