ஓவர் பந்தா நடிப்புக்கு ஆகாதுமா!!!

                    ஓவர் பந்தா நடிப்புக்கு ஆகாதுமா!!!

ஓவர் பந்தா

நடிப்பு மட்டுமின்றி நல்ல குரல் வளமும் உள்ள அந்த நடிகைக்கு கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரவேண்டுமென்பது ஆசையாம். அவர் நடிக்கும் படங்கள் நன்றாக ஓடினாலும் அவர் விரும்பும் அந்தஸ்து மட்டும் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லையாம்.

அவரின் புலம்பலாவது – நான் நடிக்கும் படங்கள் ஹிட்டாகின்றன, விளம்பர நிகழ்ச்சிகளை நான் புறக்கணிப்பது இல்லை, படங்கள் பற்றி நல்லவிதமாக பேசுகிறேன் அப்படி இருந்தும் ஏன் எனக்கு முன்னணி நடிகை அந்தஸ்து கிடைக்கவில்லை என்கிறாராம் அந்த நடிகை.

சினிமா வட்டாரத்திலோ இந்த நடிகைக்கு திமிர், பிடிவாதம், பந்தாவுக்கு குறைச்சலே இல்லையாம் என பரவலாக பேசப்படுகிறதாம். சினிமாவில் இந்த மூன்று விஷயம் இருந்தால் முன்னணி நடிகையாக வலம்வர முடியாது எனவும், அதை எல்லாம் தூக்கிப்போட்டால் தான் முன்னணி நடிகையாக கொடிபறக்க முடியும் என்று பலரும் கிசுகிசுக்கிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]