ஓவராக திமிறும் நடிகை

ஸ்கெட்ச் போட்ட நடிகர் தற்சமயம் பொலிஸ் வேடமேற்று ஒரு படத்தில் போலீசாக நடித்து வருகிறாராம். அந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த சின்ன நம்பர் நடிகை இரண்டாவது பாகத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் முதலில் ஒப்பந்தமானாராம்.

பின்னர் தனது கதாபாத்திரத்தில் வலுவில்லை என்று கூறி நாயகி படக்குழுவில் இருந்து வெளியேறிவட்டாராம். நாயகி மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், தன்னால் படத்தில் நடிக்க முடியாது என்று கறாராக கூறிவிட்டாராம். இதையடுத்து படத்தில் அந்த நடிகை இறந்துவிட்டதாக ஒரு காட்சி வைத்துவிட்டு படத்தை வேறு நாயகியை வைத்து எடுத்துவிடலாம் என்று படக்குழு யோசித்து வந்ததாம்.

ஆனால் நாயகி அதற்கும் பிரச்சனையாக வந்து நிற்கிறாராம். படத்தில் தன்னை பற்றிய எந்த அறிகுறியும் இருக்கக்கூடாது என்று நாயகி கூறியதாக ஒரு பேச்சு அடிபடுகிறதாம். அந்த நாயகிக்கு இது கொஞ்சம் ஓவர் தான் என்று கோலிவுட்டில் கிசுகிசுத்து வருகிறார்கள்.