ஓரிரு தினங்களில் காலநிலையில் மாற்றம்

ஓரிரு தினங்களில் காலநிலையில் மாற்றம்

இனிவரும் ஓரிரு நாட்களில் நாட்டில் நிலவிவரும் வரட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஓரிரு இடங்களில் அடிக்கடி மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் தெரிவித்தனர். அதாவது ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையானது பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மழையுடன் 40கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]