ஓய்வூதியத்தைப் பதிவு செய்யும் மீள் பதிவுக் கால நீடிப்பு ஜுலை 31 உடன் முடிவு

விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு முறையின் கீழ் மீள் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால நீடிப்பு ஜுலை மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக ஓய்வூதிக் கொடுப்பனவுப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் அறிவித்துள்ளார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இணையத் தள தரவு கட்டமைப்பொன்றை உருவாக்கும் பொருட்டு அரச சேவையில் இருப்போர் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு சம்பந்தமான தங்களது விவரங்களை மீள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கான கால நீடிப்பு இம்மாதம் 31ஆம் வரை உள்ளது.

ஆயினும் தற்போது ஓய்வூதியம் பெற்றுக் கொள்ளும் அரச சேவை ஓய்வூதியக் காரர்கள் தங்களைப் பதிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, முடிந்தவரையில் அரச சேவையாளர்கள் தங்களை விரைவாக மீளப் பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இந்தப் பதிவுகள் இணையத் தள தரவு கட்டமைப்பொன்றை உருவாக்கவும் அதன்மூலம் எதிர்காலத்தில் விதவைகள் மற்றும் அநாதைகள் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமைகளை முறையாக முன்னெடுக்கவும் உதவும்.

தற்போது வரையில் இலங்கையில் 3 இலட்சத்து 80 ஆயிரம் அரச சேவையாளர்கள், விதவைகள் மற்றும் அநாதைகள் உள்ளிட்டோருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு பற்றிய விவரங்களை பதிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]