ஓய்வு பெறும் முனைப்பில் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா ..!

 

ஓய்வு பெறும் முனைப்பில் பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா ..!

மிஸ்பாஹ் உல்ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட்அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதுவரை நிறைவுக்கு வந்துள்ள 2  டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி கண்டுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பது பற்றி சிந்தித்து வருவதாக 43  வயதாகும் பாகிஸ்தான் டெஸ்ட் அணித்தலைவர் மிஸ்பாஹ்  தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெறும் நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். சிட்னி டெஸ்ட் அல்லது அதற்கு முன்பாகவே ஓய்வு பெறுவேன்.

அடுத்த 2 நாட்கள் இதுபற்றி முடிவு செய்து அறிவிப்பேன். சிட்னி டெஸ்ட்டில் விளையாடுவது பற்றி சிந்திக்க வில்லை என்றும் மிஸ்பாஹ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக ௭௧ டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிஸ்பாஹ்வுக்கு 5000  டெஸ்ட் ஓட்டங்கள் பெறுவதற்கு இன்னும் 105  ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்த தொடரில் இதுவரை 4 இன்னிங்ஸ்சில் 20  ஓட்டங்களை மட்டுமே மிஸ்பாஹ் பெற்றுள்ளார்.