ஓமத்திராவகம் அருந்தியதால் 2வயது ஆண்குழந்தை பரிதாப பலி…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை – கோறளங்கேணி தேவாபுரம் பகுதியில் சுகவீனமடைந்திருந்த 2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஓமத்திராவகம் அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளது பற்றிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவநீதான் ரஜிதன் (வயது 2) எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது குழந்தை இரண்டு தினங்களாக சுகவீனமுற்ற நிலையிலிருந்ததாகவும் அதனால் ஓமத்திராவகம் அருந்தக் கொடுத்த நிலையில் அருகிலுள்ள மாடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் குழந்தை வியாழக்கிழமை 08.03.2018 உயிரிழந்து விட்டதாகவும் உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக மாவடிவெம்பு பிரதேச வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]