ஓட்ஸ் மனித உணவா? குதிரையின் உணவா?

இன்றைய நவீன வேகமான வாழ்க்கையோட்டத்தில் பயணிக்கும் அனைவரும் முகங்கொடுக்கும் முக்கிய நோய்கள்தான் சக்கரை வியாதி, கொலஸ்ரோல் அதிகரிப்பு, புற்றுநோய்.

மனிதனின் முழுமையான வாழ்நாள் பாதி வாழ்நாளாக குறித்த வியாதிகள் குறைத்துவிடுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இந்த தொற்றாத நோய்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 8 வயது சிறுவன் முதல் 60வயது தாத்தாவரை புற்றுநோய் படர்ந்துபோயுள்ளது.இன்றைக்கு 30, 40 வருடங்களுக்கு முதல் இந்த நோய்கள் எங்கே இருந்தன? என்பது அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டிய ஒரு விடயமாகவுள்ளது.

மேற்கத்தேய நாடுகள் தமது பாரம்பரிய உணவு வகைகளை விடுத்து தொழில்நுடப் வளர்ச்சி, நவீன வாழ்க்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதிய உணவு பழக்க வழக்கங்களுக்கு மாறின. 20ஆம் நூற்றாண்டின் கால்பாதிக்குப் பின்னர் முற்றிலும் நவீன விரைவு உணவு முறைக்கு மேற்கத்தேய நாடுகள் மாறியதன் பின்னரே இந்த தொற்றாத நோய்கள் பற்றிய வெளிப்பாடு ஆரம்பமானது.

சக்கரை வியாதி, கொஸ்ரோல் அதிகரிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் நவீன உணவு பழக்க வழக்கத்தின் விளைவுகளாகும். அதன் நிமித்தம் ஓட்ஸ் எனப்படும் தானியம் அங்கு வளர்க்கப்பட்டது. அது சக்கரை, கொலஸ்ரோல் என்பவைக்குத் தீர்வாக அமைந்தது. ஆனால், உண்மையில் அது ஓட்ஸ் மனித உணவாக பயன்படுத்துவதற்கு முன்னர் குதிரைகளுக்காக வளர்க்கப்பட்ட தானியமாகும். அது சக்கரை, கொலஸ்ரோல் வியாதிகளுக்கு தீர்வளித்தாலும் உடம்பில் சத்துகளை அதிகரிப்பதற்கான காரணியாக இருக்கவில்லை.

பின்னர் ஓட்ஸ் பதப்படுத்தப்பட்டு சத்துகளுக்கான கூறுகள் உள்ளடக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனால், இவை அனைத்தும் இரசாயன கலவையாக உள்ளமையை மக்கள் அறிந்துள்ளமை குறைவே. மேற்கத்தேய உணவு கலாசாரம் எமது நாடுகளிலும் காலப் போக்கில் தொற்றிக்கொண்டதால் இன்று இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் இந்த சக்கரை நோய், கொலஸ்ரோல் அதிகரிப்பு, புற்றுநோய் என்பன தலைவிரித்தாடுகின்றன.

இவற்றுக்கு தீர்வாக நாம் பயன்படுத்தும் ஓட்ஸ் என்பது உண்மையில் குதிரை உணவே. இதனால் குறித்த வியாதீகளுக்கு தீர்வு கிடைத்தாலும் மாறாக வேறு பல நோய்கள் உடம்பில் ஏற்படுத்தப்பட்டு விடுகின்றன. ஓட்ஸை அறிமுகப்படுத்தி மேற்கத்தேய நாடுகளில் அது இன்று பெரும்பாலும் உண்பதில்லை என்பதே நிதர்ச்னம்.

வரலாற்று ரீதியாக எமது பாரம்பரி உணவு பழக்க வழக்கங்களை விட்டதன் விளைவே நாம் இந்த நோய்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. நோய் வந்தால் தீர்வு உள்ளது என்று நாம் கண்டதை உண்டு எதிர்கால வாழ்க்யை தொலைத்துவிடக் கூடாது. எனவே, தமிழர்களின் பாம்பரிய உணவு என்பது மருத்துவ குணமிக்க அருமையான சுவையான உணவுகளும் கூட. நவீன உலகில் எதையோ தேடிக்கொண்டு ஓடும் நாம் எமது பாரம்பரிய உணவு பழகத்தை தொடர்ந்தாலே 90வீதமான நோய்களில் இருந்து விடுபடலாம் என்பது நிதர்சனம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]