ஓட்டுனரோடு சேர்ந்து பேருந்தை இயக்கிய குரங்கு- இணையத்தில் வீடியோ வைரல்

கர்நாடகா மாநிலத்தில் குரங்கு ஒன்று ஸ்டியரிங்கில் அமர்ந்து கொண்டு ஓட்டுனரோடு சேர்ந்து பேருந்தை இயக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் தேவாநாகிரி பகுதியில் இயக்கப்பட்டு வரும் அரசுப் பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் பிரகாஷ். கடந்த வாரம் அவர் பணியில் இருந்த போது பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் குரங்கோடு வந்திருக்கிறார்.

பஸ் புறப்பட்டதும் அந்த குரங்கு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டு தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளது. மேலும் ஸ்டியரிங்கில் கைவத்து தானும் பஸ்ஸை ஓட்ட ஆரம்பித்துள்ளது.

இதைப் பார்த்து அலட்டிக்கொள்ளாத ஓட்டுனரும் குரங்கை ஸ்டியரிங்கின் மீது உட்கார வைத்து பஸ்ஸை இயக்கியுள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த பயனிகள் பதட்டமடைய தொடங்கினர். ஆனால் அதைப் பெரிதுபடுத்தாத ஓட்டுனர் சிரித்தபடியே குரங்கோடு சேர்ந்தே பஸ்ஸை இயக்கியுள்ளார். இதனை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்த ஓட்டுனரும் நடத்துனரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]