ஓட்டமாவடி பிரதித் தவிசாளர் யு.எல்.அஹமட் தலைமையில் நல்லிணக்க இப்தார் நிகழ்வு

நல்லிணக்க இப்தார் நிகழ்வு

ஓட்டமாவடி பிரதித் தவிசாளர் யு.எல்.அஹமட் தலைமையில் நல்லிணக்க இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் முதன்முறையாக பலதரப்பட்ட சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு நல்லிணக்கம், புரித்துணர்வுகளை மேம்படுத்தும் வகையில் நோன்பு திறக்கும் விஷேட இப்தார் வைபவம் நேற்று இடம் பெற்றுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் யு.எல்.அஹமட் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பல்லின சமூகங்கள் வாழும் நம் நாட்டில் சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட இலங்கையர் என்ற வகையில் ஒன்றிணைய வேண்டிய சமகால அவசியம் மற்றும் போதையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தேவை குறிந்தும் விழிப்புட்டப்பட்டது.

இதற்கான விஷேட உரையினை வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) ஆற்றினார்.

இவ்இப்தார் வைபவத்தில் மத போதகர்கள்இமூப்படைகளின் பிரதிநிதிகள்இ பிரதேச சபை உறுப்பினர்கள் அதிகாரிகள்,சிவில் சமூக அமைப்புக்களின் தலைவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் இப்தார் வைபவத்தினை ஓட்டமாவடி றேஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நல்லிணக்க இப்தார் நிகழ்வு நல்லிணக்க இப்தார் நிகழ்வு நல்லிணக்க இப்தார் நிகழ்வு நல்லிணக்க இப்தார் நிகழ்வு நல்லிணக்க இப்தார் நிகழ்வு நல்லிணக்க இப்தார் நிகழ்வுநல்லிணக்க இப்தார் நிகழ்வு நல்லிணக்க இப்தார் நிகழ்வு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]