ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி – காப்பாற்றிய அதிகாரி! வைரல் வீடியோ!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலை பிடிப்பதற்காக பயணி ஒருவர் வேகமாக ஒடி சென்று ஒரு பெட்டியில் ஏற முயன்றுள்ளார். இதன் போது எதிர்பாராத விதமாக அவரின் கால்கள் நடைமேடைக்கும் ரயிலுக்குமான இடைவெளிக்கு இடையே சிக்கியுள்ளது.

அப்போது பணியில் இருந்த ரயில்வே பொலிஸ் அதிகாரி துரிதமாக செயல்பட்டு அவரை பாதுகாப்பாக வெளியே இழுத்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக அந்த பயணி எந்தவித காயமுமின்றி தப்பியுள்ளார்.

தற்போது இந்த சிசிடிவி பதிவு இணையத்தில் வைரலாக பரவி வரும் அதே வேலை பலரும் அந்த அதிகாரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]