ஓடும் பஸ்ஸில் தீ; 15 பயணிகள் காயம்

தியத்தலாவை பகுதியில் இன்று ஏற்பட்ட பஸ் விபத்தில் 15 பயணிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தியத்தலாவை, கஹகொல்ல பகுதியில் தனியார் பயணிகள் பஸ் இன்று காலை தீப்பற்றியுள்ளது.

தீ காரணமாக காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீபற்றியமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.