ஓடி ஓடி மோடி வருகைக்கு உழைத்தவர்கள் தமிழ் மொழிக்கு கொடுத்த அதிர்ச்சி

ஓடி ஓடி வேலைசெய்தவர்கள் உழைத்தப் பணத்தை ஆற்றில் போட்ட கதையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

அவ்வாறுதான் நேற்று டிக்கோயாவில் ஒரு சம்பவம் அரங்கேறியது. இந்திய பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஒருமாதகாலமாக டிக்கோயா நகர் அலங்கரிக்கப்பட்டது வந்தது.

கரடு முரடாணப் பாதைகள் காப்பட் பாதைகளாக மாறின. காடுகள் வெட்டப்பட்டன. குளவிக் கூடுகள் அகற்றப்பட்டன. இவ்வாறு அகலங்கரிக்கப்பட்டு டிக்கோயா மற்றும் நோர்வூட் பகுதிகள் நேற்று விழாக் கோலம் பூண்டது.

குறித்த தடல்புடலான ஏற்பாடுகளை மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையிலான குழு செய்திருந்தது.

திட்டமிட்டவாறு இந்திய பிரதமர் மோடியும் நேற்று ஒரு மணியளவில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்துவைத்தார். ஆனால், அதன் பின்னர்தான் காத்திருந்தது அதிர்ச்சி.
அதாவது இந்த வைத்தியாலையை திறந்துவைக்க மோடியின் வருகிறார் என்று பல மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் பல பேர் சென்று பார்வையிட்டிருந்தனர்.

ஆனால், பரந்து விரிந்து விசாலமாக அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் தமிழ் கொலை நடந்திருந்ததை எவரும். பார்திருக்கவில்லை. மோடியை நான் தான் அழைத்த வருகின்றேன் என்று ஒரு அணியும் இல்லை நான்தான் அழைத்து வருகின்றேன் என்று மற்றுமொரு அணியுடன் ஒருமாதகாலமாக சண்டை போட்டதே தவிர இந்த ஒரு சின்ன விடயத்தை கூட அவதானிக்க முடியாது போய் இருந்தது.

மாவட்ட ஆதார வைத்தியசாலை என்று குறிப்பிடுவதற்கு பதிலாக மாவட்ட ஆநார வைத்தியசாலை எனக் எழுதப்பட்டிருந்தது. ஆதார என்பது ஆநார என்று மாறிவிட்டது.

இவர்கள்தான் மலையகத்தை சீரமைக்கப் போகிறார்களாம் என்று மலையகத்தில் முனுமுனுக்கப்படுகிறது. அத்துடன் தேசிய மொழிகள் அமைச்சரும் மலையகத்தை சார்ந்தவர். எவரும் இந்த விழாவை ஏற்பாடு செய்ய முக்கிய நபர்களில் ஒருவர் என்றும் பேசப்படுகிறதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]