ஓடாத விழுந்துடுவன்னு சொல்ல இங்க 1000 பேர் இருக்காங்க- ஜீ.வி.பிரகாஷின் ஐங்கரன் டீசர் உள்ளே

ஒருபுறம் இசையமைப்பாளர், மறுபுறம் நடிகர் என படு பிஸியான ஆளாக சுழன்றுக் கொண்டிருக்கிறார். தற்போது 4ஜி, ஐங்கரன், அடங்காதே, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம், காதலை தேடி நித்யானந்தா, ஜெயில், வாட்ச்மேன் ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதில் சர்வம் தாள மயம் தவிர, மற்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பதும் ஜி.வி தான். இந்நிலையில் தற்போது ஐங்கரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. ஈட்டி படத்தை இயக்கிய இயக்குநர் ரவி அரசு தான் இதனையும் இயக்கியுள்ளார்.

படத்தில் இன்ஜினியராக நடிக்கும் ஜிவி-க்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். “ஓடாத விழுந்துடுவன்னு சொல்ல இங்க 1000 பேர் இருக்காங்க, ஆனா விழுந்துடாம ஓடுன்னு சொல்லதான் இங்க யாருமே இல்ல” என டீசரின் இறுதியில் ஜீவி சொல்லும் வசனம், திறமைகளை யாரும் ஊக்குவிப்பதில்லை என்பதை உணர்த்துகிறது.

ஈட்டி படத்தில் வித்தியாச களத்தை கையாண்ட ரவி அரசு, ஐங்கரனிலும் சமூகத்திற்கு தேவையான ஏதோ ஒன்றை வைத்திருப்பார் என்கிறார்கள் ரசிகர்கள்.

Cast – G.V.Prakash Kumar, Mahima Nambiar, Kaali Venkat, Arul Dass, Aadukalam Narein, Hareesh Peradi, Abishek, Irene, Siddharth

Director – Raviarasu

Music Composer – G.V.Prakash Kumar

Cinematographer – Saravanan Abimanyu

Editor – Raja Mohammed

Art Director – Durairaj

Producer – B.Ganesh

Banner – Common Man Presents

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]