ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வெற்றியைப் பெற்றுள்ளோம் – மஹிந்த

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஈழப் பிராந்தியம் சுருங்கி விட்டது என்பதையே எடுத்துக் காட்டுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஈழப் பிரதேசமும் கூட சுருங்கியுள்ளது. இது தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றுள்ள வெற்றி தொடர்பாக, நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருந்த இலங்கையின் வரைபடத்தை காண்பித்து மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]