ஒல்லி நடிகருக்காக டட்டூ குத்திய டப்ஸி!

கொலிவுட் நடிகைகளின் மத்தியில் டட்டூ கலாச்சாரம் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த கலாச்சாரம் ஆபாசத்தின் உச்சிக்கே செல்லும் அளவுக்கு முற்றிவிட்டது.

டாட்டூவை ஆபாசமாக மாற்றிய பெருமை தனுஷ் படத்தில் அறிமுகமான டப்சியை சேரும் என்கிறது திரையுலக வட்டாரங்கள்.

சமீபத்தில் டப்சி பின்பகுதியில் டட்டூ வரைந்து அதை புகைப்படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ஆபாசத்தின் எல்லை தொட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் டப்சி கவலைப்படமால், “ஏற்கனவே எனது கணுக்காலில் டட்டூ வரைந்திருக்கிறேன்.
தற்போது இடுப்பின் பின்பகுதியில் வரைந்திருக்கிறேன். இங்கு வரைந்ததற்கு காரணம் இந்த 2 இடங்களையும் அடிக்கடி பார்க்க முடியாது.

எப்போதாவதுதான் பார்க்க முடியும். அடிக்கடி டாட்டூவை பார்த்தால் போர் அடித்துவிடும். அதனால்தான் இந்த இடத்தில் வரைந்தேன்”என்று கூலாக கூறியிருக்கிறார்.

ஆனால் ஒல்லி நடிகர் தான் அந்த இடத்திலும் டட்டூ குத்து என்று சொன்னார் அதனால் தான் உடனடியாக நடிகை அப்படி செய்தார் என்கிறது கோடம்பாக்கம்.
அடுத்த படத்தில் ஒல்லி நடிகரின் ஹீரோயின் டப்சி தான். கூட்டிக் கழிச்சு பாருங்க கணக்கு சரியாவரும்.