தலவாக்கலை – ஒலிரூட் பகுதியில் வீடு ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சாவை விற்பனை செய்தவர் மற்றும் கொள்வனவு செய்ய வந்திருந்த இருவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தலவாக்கலை, ஒலிரூட் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இந்த கஞ்சா வியாபாரம் நீண்ட காலமாக இடம்பெற்று வந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]