ஒற்றையாட்சிக்கு கூட்டமைப்பு இணங்கம் தெரிவிக்கவில்லை – சுமந்திரன்

நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஒஸ்மானியா கல்லூரி வீதியில் நேற்று மாலை நடந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரை் தொடர்ந்து கூறுகையில்,

“ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என்று கூறப்பட்டுள்ளது.

‘ஏக்கிய இராஜ்ய’ என்பது ஒற்றையாட்சி அல்ல. அது ஒருமித்த நாடு என்றும் இடைக்கால அறிக்கையில் எழுதப்பட்டிருக்கிறது.

ஒருமித்த நாடு என்பதற்கே நாங்கள் இணங்கினோம். ஆனால் நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டோம் என ஊடகங்கள் பொய்யை திரும்ப திரும்ப சொல்கின்றன.

70 வருடங்களாக தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் அனைவரும் துயரங்களை சந்தித்தார்கள். அந்த துயரங்களுக்கு ஒரு தீர்வைக் காணவேண்டும்” என்றார்.