ஒற்றுமை அவசியம் ; தமிழ் தலைமைகளுக்கு இந்திய தூதுவர் அறிவுரை

தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்தில் ஒற்றுமை முக்கியம் இந்திய தூதுவர் அறிவுரை

தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை முக்கியமானது என்று இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தியுள்ளார்.

வடக்கிற்கான முதலாவது பயணத்தை நேற்று மேற்கொண்ட இந்திய தூதுவர் இங்கு இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே இந்தக் கருத்தை வெளியிட்டார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கும், பொருளாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் வடக்கில் உள்ள அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை முக்கியமானது.

எனினும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் எண்ணம் தனக்கு கிடையாது. வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னணியிலேயே இந்திய தூதுவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

வடக்கிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய தூதுவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

எனினும், வடமாகாண முதல்வருடனான சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு இந்தியத் தூதுவர் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலையின் விவசாய பீடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாணவர் திறன் விருத்திக்கான கட்டடத்தொகுதி மற்றும் பொறியியல் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள இரு மாடிக்கட்டடம் ஆகியன இன்று (வெள்ளிக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து இந்திய தூதுவரால் திறந்துவைக்கப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]