ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்ற பெண்- பெருந்தொகை நிதியுதவி வழங்கிய ஜனாதிபதி

இலங்கையில் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த குடும்பத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி உதவி செய்துள்ளதோடு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த விமானப்படையின் பெண் சிப்பாய் தனது குடும்பத்தினருடன் நேற்று ஜனாதிபதியை சந்தித்தார்.

ஆண் குழந்தைகள் இரண்டையும் பெண் குழந்தைகள் இரண்டையும் பெற்றெடுத்த தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் குழந்தைகளை வளர்ப்பதற்கு போதுமான வசதி இந்த குடும்பத்திடம் இருக்கவில்லை. இந்நிலையில் ஜனாதிபதியிடம் கூறுங்கள் என்ற நிகழ்ச்சி மூலம் இந்த தம்பதி ஜனாதிபதியிடம் உதவி கோரியுள்ளனர்.

அதற்கமைய இந்த தம்பதியை அழைத்த ஜனாதிபதி நெகிழ்ச்சியுடன் குழந்தைகளை தூக்கி விளையாடியுள்ளார். அத்துடன் ஒரு குழந்தைக்கு 5 இலட்சம் ரூபா என்ற கணக்கில் 2 மில்லியன் ரூபாய் நிதி உதவி செய்துள்ளார்.

அத்துடன் நேற்று காலை இந்த குடும்பத்தை சந்தித்த ஜனாதிபதி அவர்களுடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்து கொண்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]