முகப்பு Cinema ஒரே நேரத்தில் விருந்து தரும் தல-தளபதி

ஒரே நேரத்தில் விருந்து தரும் தல-தளபதி

ஒரே நேரத்தில் விருந்து தரும் முயற்சியில் தல-தளபதி படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர்.

அந்தவகையில், தமிழ் சினிமாவில் இவர்கள் இல்லை என்றால் தற்போது சினிமா இல்லை என்ற அளவிற்கு வளர்ந்து நிற்கும் விஜய் மற்றும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தின் டீசர் மற்றும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். அஜித், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சமீபகால அரசியலை மையப்படுத்தி உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமியும் நடிக்கின்றனர்.

தீபாவளிக்கு ரிலீசாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ஆம் திகதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேநாளில் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் அஜித் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com