ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்பு

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 29 ஆயிரத்து 969 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில்
கேரள மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.திருவனந்தபுரம், எர்ணாகுளம், மலப்புரம், கோட்டயம், கோழிக்கோடு பகுதிகளில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.தினமும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது, பல அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் தரையில் படுத்து சிகிச்சை பெரும் அவல நிலை உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் 29 ஆயிரத்து 969 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் அதிகபட்சமாக 11 ஆயிரம் பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]