ஒரே நாளில் 11 படங்களா?

ஒரே நாளில் 11 படங்கள்

ஒரே நாளில்

தமிழ் சினிமாவில் வாரம்தோரும் சாதாரணமாக 4 படங்கள் வெளிவந்து கொண்டு தான் உள்ளன.அடுத்த வாரம் ஆயுத பூஜை அன்று விஜய்சேதுபதியின் ‘கருப்பன்’, மகேஷ்பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’, கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மகாதேவகி’, நயன்தாராவின் ‘அறம்’ உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ளன.

அதன் காரணமாக திரை அரங்குகளை பிடிப்பதற்காக நாளை மறு தினம் 11 படங்கள் வெளிவர உள்ளன.இதில் ராணா நடிப்பில் உருவான அரசியல் படம் ‘நான் ஆணையிட்டால்’, எரிவாயு குழாய் பிரச்சினையை சொல்லும் ‘தெருநாய்கள்’, அனுஹாசன் நடித்துள்ள ‘வல்லதேசம்’, சரண் இயக்கத்தில் வினய் நடித்துள்ள ‘ஆயிரத்தில் இருவர்’, இனிகோ பிரபாகர் நடித்திருக்கும் ‘பிச்சுவாகத்தி’, சிலை கடத்தலை பின்னணியாக கொண்ட ‘களவு தொழிற்சாலை’, கோகுல் நடிக்கும் ‘கொஞ்சம் கொஞ்சம்’ இவைதவிர ‘பயமாஇருக்கு’, ‘நெறி’, ‘காக்கா’ ஓவியா மலையாளத்தில் நடித்து தமிழில் ‘டப்’ செய்யப்பட்டுள்ள ‘போலீஸ் ராஜ்ஜியம்’ ஆகியவை வெளிவர உள்ளன.

தமிழ் நாட்டில் மொத்தம் 200 திரைஅரங்குகள் உள்ளன ஆயினும் இவற்றில் சமீபத்தில் வெளியாக அஜித்தின் ‘விவேகம்’, விக்ரம்பிரபுவின் ‘நெருப்புடா’, விஷ்ணுவிஷாலின் ‘கதாநாயகன்’ கடந்த வாரம் திரைக்கு வந்த விஷாலின் ‘துப்பறிவாளன்’, ஜோதிகாவின் ‘மகளிர் மட்டும்’ ஆகிய படங்கள் ஓடுகின்ற நிலையில் உள்ளன.

மீதம் உள்ள திரை அரங்குகளில் தான் இவ் படங்கள் திரையிடப்படும். அடுத்த வாரம் வர இருக்கும் 11 படங்களில் எத்தனை தாக்குபிடிக்கும் என்று பார்ப்போம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]