ஒரே நாளில் அலாவுதீன் அற்புத கேமிரா செய்த சாதனை – வேற எந்த படமும் இதுவரை செய்யவில்லை!

தற்போது படங்கள் வெளிவந்து தான் சாதனை செய்ய வேண்டும் என்றேல்லாம் இல்லை, படத்தின் டீசர், பாடல்கள் வெளியீடு, டிரைலர், ஸ்னீக் பீக் என அனைத்தும் இணையத்தில் படம் வருவதற்கு முன்பே பல சாதனைகளை செய்துவிடுகிறது.

தற்போது 4K HDR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்த உலகின் முதல் டிரைலர் என்ற பெருமை அலாவுதீன் அற்புத கேமிரா படத்திற்கு கிடைத்துள்ளது. கடந்த ஃபிப்ரவரி 11ஆம் திகதி வெளியான இந்த டிரைலர் ஒரு நாளில் 5 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

மூடர் கூடம் நவீன் இயக்கி நடிக்க, கயல் ஆனந்தி ஜோடியாக நடித்துள்ளார். சாகச திரில்லர் படமாக இக்கதை ஜெர்மனி, உக்ரைன், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.

இதோ அந்த டிரைலர்…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]