ஒரே இரவில் முகப்பரு தொல்லையில் இருந்து நீங்கி சருமத்தை வெள்ளையாக்க இதோ சூப்பர் டிப்ஸ்!!

ஆண்கள், பெண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பரு முகத்தில் வந்தால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும். முகப்பரு வருவதற்கு காரணம் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருப்பதோடு, அழுக்குகள் அதிகம் சேர்ந்து பிம்பிளாக உருவாகின்றன.

இந்த முகப்பருவை போக்க பலரும் பல க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தியிருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைக்காது. ஆனால் நம் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு உங்கள் முகப்பருவைப் போக்க முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் உங்கள் முகத்தில் உள்ள முகப்பருவை விரைவில் போக்கலாம்.

இங்கு ஒரே நாளில் முகத்தில் உள்ள முகப்பரு அல்லது பிம்பிளை மறைய வைக்கும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து முயற்சித்துப் பயன் பெறுங்கள்.

க்ரீன் டீ செய்து, அதனை ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி, ஐஸ் கட்டிகளாக்கி, அவற்றைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள முகப்பரு இருந்த இடம் காணாமல் போய்விடும்.

Related image

தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்தால், இது சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. அதிலும் முகப்பரு அதிகம் இருந்தால், தக்காளியின் சாற்றினை தினமும் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சீக்கிரம் முகப்பரு மறையும்.

பூண்டு

Related image

முகப்பருவை உருவாக்கும் கிருமிகளை அழித்துவிடும். அதற்கு முகப்பரு உள்ள இடத்தில் ஒரு துளி பூண்டு சாற்றினை தடவி 5-10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த முறை உண்மையிலேயே நல்ல பலனைத் தரும்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சை சாற்றினை சிறிது சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் இருந்த முகப்பரு சீக்கிரம் போய்விடும்.

ஆப்பிள் சீடர் வினிகரை காட்டனில் நனைத்து, முகப்பரு உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்து வந்தால், முகப்பரு விரைவில் மறையும். ஆனால் ஆப்பிள் சீடர் வினிகரை முகம் முழுவதும் தடவ வேண்டாம், இல்லையெனில் அது பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். எனவே பாதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தடவுங்கள்.

இரவில் படுக்கும் முன் சிறிது எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து, அந்த நீரை முகத்தில் தடவி, மறுநாள் காலையில் பார்த்தால், முகத்தில் உள்ள முகப்பரு காய்ந்து உதிர்வதைக் காணலாம். முக்கியமாக சிலருக்கு எலுமிச்சை சாறு அலர்ஜியை ஏற்படுத்தும், அத்தகையவர்கள் இம்முறையைத் தவிர்த்து வேறு முறையைப் பின்பற்றுவது நல்லது.

கடுகில் பிம்பிளைப் போக்கும் சாலிசிலிக் அமிலம் உள்ளது. எனவே 1/4 டீஸ்பூன் கடுகை பொடி செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால், விரைவில் முகப்பரு போய்விடும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]