ஒரு பாடலுக்கு ரூ25 லட்சம் சம்பளம் வாங்கும் அனிருத்

இளம் வயதில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து அதிக சாதனை படைத்தவர் ஒரு இசையமைப்பாளர் அனிருத்.

இவரின் இசையில் வெளியான பல பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வைய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கிலும் அதிகப்படியாக பேசப்பட்டது.

அந்தவகையில், தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் ‘கல்யாண வயசு’ பாடல் மிகுந்த வரவேற்பு பெற்றது.

அத்தோடு, இதில் கன் இன் காதல் என்ற பாடல் ஸ்பெஷல் புரமோஷன் பாடலாக அமைந்தது.

தற்போது சமந்தா நடிக்கும் யு டர்ன் படத்தில் ஒரே ஒரு புரமோஷன் பாடலுக்கு அனிருத் இசையமைக்கிறாராம்.

இப்படத்தில் பாடல்கள் கிடையாதாம். தெலுங்கில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழிலும் ரீமேக் ஆகிற நிலையில், இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ள சமந்தாவே இதில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இந்த ஒரு பாடலுக்காக அனிருத்துக்கு ரூ25 லட்சம் சம்பளம் பெறுகிறார் என கூறப்படுகின்றது.

மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திலும் அனிருத் இசை அமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]