ஒரு நாள் போட்டியில் 10000 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைந்த டோனி!

10000 ஆயிரம் ஓட்டங்களை ஒரு நாள் போட்டியில் கடந்த 5 வது இந்திய வீரர் என்ற சாதனையை டோனி செய்துள்ளார்.

இந்திய அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று காலை முதல் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில்,

4வது விக்கெட்டிற்கு களமிறங்கி துடுப்பெடுத்து ஆடிய போது டோனி ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமையினையும், இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையினையும் டோனி பெற்றார்.

இவருக்கு முன்னதாக டெண்டுல்கர் 18,426 ரன்கள், கங்குலி 11, 221 ரன்கள், திராவிட் 10,768 ரன்கள் மற்றும் விராத் கோஹ்லி 10,232 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளனர்.

அதேபோல விக்கெட் கீப்பர்களில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா 404 போட்டிகளில் 14,234 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]