பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் அசத்தலான படங்களை தர நடிகர் விஜய் சேதுபதி தயாராகிக்கொண்டிருக்கின்றார். ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ‘ இந்த ஆண்டின் அவரது முதல் ரிலீசாக அமையவுள்ளது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றொரு கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தை ‘7C’s Entertainment Private Limited’ நிறுவனமும் ‘Amme Narayana Entertainment’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரு நல்ல நாள் பாத்துசொல்றேன்’ படத்தில் போஸ்டரும் டீசரும் மிகப்பெரிய ஹிட்டாகி இப்படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு கூட்டியுள்ளது. காயத்ரி மற்றும் நிஹாரிகா ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் , கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]