ஒரு தலை காதல் விவகாரத்தால் பட்டதாரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவர்கள்

ஒரு தலை காதல் விவகாரத்தால் பட்டதாரி மாணவர் மாணவியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா வாட்கேவி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி வஜாதேவி. இவர் அங்குள்ள உள்ள பெண்கள் விடுதியில் தன் தோழியை பார்க்க சென்றுள்ளார். அப்போது அக்கல்லூரியில் படிக்கும் பட்டதாரி மாணவரான அவினேஷ் வஜாதேவியை பேருந்து நிலையத்தில் சந்தித்து பேச முயற்சித்துள்ளார். வஜாதேவி அவினேஷை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவினேஷ் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து திடீரென வஜாதேவி மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் வஜாதேவி உடம்பு முழுவதும் தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். தீயினால் வஜாதேவி உடம்பு முழுவம் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் சிகிச்சைகாக உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சித்தூர் போலீசார் அவினேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் பிரச்சணையில் இச்சம்பவம் நடைபெற்றதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]