ஒரு சில எம்.பிக்களின் செயற்பாட்டால் நாடாளுமன்ற கௌரவத்துக்கு இழுக்கு : சபாநாயகர்

ஒரு சில எம்.பிக்களின் செயற்பாட்டால்
நாடாளுமன்ற கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

‘இலங்கை நாடாளுமன்றம் சிறப்பான வழியில் பயணிக்கின்றது என சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பாராட்டியுள்ளார். எனவே, இலங்கை நாடாளுமன்றத்தை உலகிலுள்ள முன்மாதிரியான சபையாக மாற்றுவதே எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அதேபோல் நாடாளுமன்றத்துக்குள் சகல வசதிகளையும்கொண்ட ஊடக மத்தியநிலையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும்.சபை அமர்வுகள் முதல் இரண்டுமணிநேரம் நேரடி ஒளிபரப்புசெய்யப்படுகின்றது. முழு அமர்வையும் நேரடி ஒளிபரப்புசெய்தால் அதிக செலவு ஏற்படும்.
நிலையியற்கட்டளை, ஒழுக்கக்கோவை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் கௌரவத்துக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் காத்திரமான உரைகள் நிகழ்த்தப்படுகின்றன. பலன்மிக்க பிரேரணைகள் நிறைவேற்றப்படுகின்றன. எனினும், ஒருசில எம்.பிக்களின் தவறான செயற்பாட்டால் நாடாளுமன்றத்துக்குள்ள கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. அதை திருத்தியமைக்கவேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]