ஒரு இலட்சம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு ஏறாவூர்ப் பிரதேசத்தில் சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடி நபருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

ஒரு இலட்சம் ரூபா

ஏறாவூர்ப் பொலிஸார் குறித்த சந்தேக நபரை புதன்கிழமை (04) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்த போது குற்றவாளியாக இனங்காணப்பட்டு அபராதம் விதிக்கப்படுள்ளது.

காத்தான்குடியை – 5, பிரிவைச் சேர்ந்த அப்துல் நழீம் மொஹமட் ருஷ்மி (வயது 40) என்பவர் காத்தான்குடியிலிருந்து ஏறாவூர்ப் பிரதேசத்தினூடாக இந்த சிகரட்டுக்கள் எடுத்துச்செல்லப்பட்டவேளை வாகனங்களைச் சோதனையிட்ட பொலிஸார் 36 பொதி சிகரட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்

ஒரு இலட்சம் ரூபா

பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் பொறுப்பதிகாரியுமான சிந்தக பீரிஸின் நெறிப்படுத்தலின் கீழ் ஏறாவூர் குற்றத் தடுப்புப் பொ‪லிஸ் பொறுப்பதிகாரி நிரோஷன் பெர்னாண்டோ, புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர்களான டபிள்யூ.ஏ.கே. மங்கள குணசேகர மற்றும் கலீல் முஹம்மத் இம்ரான் ஆகியோரே இந்த சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் விநியோகஸ்தரைக் கைது செய்ததோடு அவர் வசமிருந்த மோட்டார் சைக்கிள், சட்டவிரோத சிகரெட்கள் என்பனவற்றையும் கைப்பற்றினர்.

புகைத்தல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் நாட்டில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் சட்டவிரோதமாக சிகரட்டுக்களை வியாபாரம் செய்வது கவனிக்கத்ததே.

ஒரு இலட்சம் ரூபா