ஒருவர் படுகொலை; சந்தேக நபருக்கு வலைவீச்சு

இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தீவிரமடைந்ததையடுத்து ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரண, பொருவாதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே, இன்று கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரின் சடலம் தற்போது ஹொரண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]