ஒருநாள் மற்றும் T-20 தொடரிலிருந்து அஞ்சலோ மெத்யூஸ் நீக்கம்

ஒருநாள் மற்றும் T-20 தொடரிலிருந்து அஞ்சலோ மெத்யூஸ் நீக்கம்

இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் T-20 தொடரிலிருந்து, முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் நீக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர் உடற் தகுதியுடன் இல்லை என்ற காரணத்தினாலேயே மட்டுப்படுத்தப்பட்ட இருவகைத் தொடர்களிலிருந்தும் அவரை நீக்கக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது குறித்து இதுவரையில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் தொடரில் இலங்கை கிரிக்கட் அணி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியதற்கு, அணித்தலைவர் மெத்யூஸ் மீது கடும் விமர்சனம் எழுந்தது.

தெரிவுக்குழு மற்றும் அணி பிரதான பயிற்றுவிப்பாளரும் எடுத்த தீர்மானத்திற்கு அமைய அவரிடமிருந்து அணித்தலைமைப் பொறுப்பு பறிக்கப்பட்டு, சந்திமலிடம் ஒப்படைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]