ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசையில் வோர்னர் முதலிடம்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னர் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டுமுதல் வெறுமனே 28 ஓருநாள் போட்டிகளில் 9 சதம், 4 அரைசதம் அடங்கலாக 1755 ஓட்டங்களை வோர்னர் குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இந்த புதிய தரவரிசையில் 2 வது இடத்தில் தென் ஆபிரிக்க அணியின் டி வில்லியர்ஸும் , 3 வது இடத்தில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியும் தரநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் குயிண்டன் டி கொக் 4 வது இடத்திலும், நியுசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 5 வது இடத்திலும் தரநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்..

ஜோ ரூட், ஹாசிம் அம்லா, ஸிடீவ் ஸ்மித், மார்டின் கப்டில் மற்றும் பாகிஸ்தானின் வளர்ந்துவரும் துடுப்பாட்ட வீரர் பாபர் அசாம் ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.