ஒருதொகை தங்கத்தை கடத்த முற்பட்ட விமான நிலைய அதிகாரி கைது

சட்டவிரோதமான முறையில் ஒருதொகை தங்கத்தை கடத்த முற்பட்ட விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் நான்கு கிலோ கிராம் தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட அவர் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 32 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]