முகப்பு News Local News ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்

ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம்

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேர் இந்த பயணத்தில் இணைந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த நிலையில், அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த கண்காணிப்பு விஜயத்தில் இணைந்துகொண்டதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com