ஒன்றிணைந்த எதிரணி அலட்டி கொள்வதில்லை

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தனிப்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் சட்ட மூலங்கள் குறித்து, ஒன்றிணைந்த எதிரணி கவனத்தில் கொள்வதில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரெஜி ரணதுங்கவின் நினைவுக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியினால் நாடாளுமன்ற ஆரம்ப அமர்வின் போது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யும் திருத்தச் சட்ட மூலம் முன்வைக்கப்படவுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைக் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]