முகப்பு News Local News ஒன்றிணைந்த எதிரணியின் ஜனபலய போராட்டம்

ஒன்றிணைந்த எதிரணியின் ஜனபலய போராட்டம்

கூட்டு எதிர்கட்சியினரின் ‘ஜனபலய’ அரச எதிர்ப்பு போராட்டம் கொழும்பு – கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகளவான பொதுமக்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கொழும்பின் களனி, நுகேகொட, பொரளை உள்ளிட்ட பகுதிகளும் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டு எதிர்கட்சியினரின் ‘ஜனபலய’ அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மஹியங்கனை ஆதிவாசிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதிவாசிகள் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு பேரணியில் பங்கெடுத்துள்ளனர்.

ஜனபலய ஆர்ப்பாட்டக்காரர்களின் முதற்தொகுதியினர் லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேநேரம் கொழும்பு – நகர மண்டபம் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ஜனபலய’ அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் கலந்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் இல்லம், நாடாளுமன்றம் உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

‘ஜனபலய’ அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாகவே இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அதிகளவான பொலிஸார், கலகம் அடக்கும் பொலிஸார் குறித்த பகுதிகளில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ‘ஜனபலய’ அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச தேரர்களிடம் ஆசிர்வாதம் பெற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com